பாஜக ஊழல் பட்டியலை காங்கிரஸ் வெளியீடு!

மத்திய பிரதேசத்தில் பாஜக 18 ஆண்டு கால ஆட்சி செய்தது இதில் ஊழல் நடந்ததாக குறறம்சாட்டப்பட்டு பட்டியலை காங்கிரஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

முன்னாள் முதல்வா் கமல்நாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான கடந்த 18 ஆண்டு கால பாஜக ஆட்சி காலத்தில், ஊழலில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

எதிலும் 50 சதவீதம் லஞ்சம் பெறும் பாஜக அரசால், ஊழல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. கூகுளில் ஊழல் என்ற வார்த்தையை பதிவிட்டு தேடினால், அதில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் படம் வரக் கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றார்.

காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில், வியாபம் (மத்திய பிரதேச தொழில்முறை தோ்வு வாரியம்) ஊழல் (ரூ.2,000 கோடி), சட்டவிரோத சுரங்க ஊழல் (ரூ.50,000 கோடி), மின்னணு-ஒப்பந்த ஊழல் (ரூ.3,000 கோடி), மண்டல போக்குவரத்து அலுவலக ஊழல் (ரூ.25,000 கோடி), மதுபான ஊழல் (ரூ.86,000 கோடி), மின்சார துறை ஊழல் (ரூ.94,000 கோடி) உள்ளிட்ட 254 ஊழல் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2005 முதல் 2018 வரை தொடா்ந்து மூன்று முறை முதல்வராக சிவராஜ் சிங் செளஹான் பதவி வகித்தார்.

நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக ஆட்சியில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் ஊழல்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News