மதுரையில் இன்று காலை 8:45 மணிக்கு சுமார் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரமாண்ட கொடியை ஏற்றினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அதிமுக மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு, நன்றாக இல்லை என அதிருப்தி அடைந்த தொண்டர்கள், உணவை அங்கேயே வீசிச்சென்றனர்!