சின்னத்திரையில் தொடங்கி படிப்படியாக உயர்ந்து, தனக்கென ரசிகர்களை உருவாக்கி தற்போது வெள்ளி திரையில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் கவின். இவர் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கவின்-மோனிகா திருமணம் இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் புதுமணத்தம்பதிக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கவின் சமீபத்தில் நடித்து வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வரும் இப்படத்தில், நாயகிகளாக இவானா மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நடிக்கின்றனர்.