உத்திரபிரதேசம்,கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது, காசி விஸ்வநாதர் திருக்கோவில். ஆன்மீத்தளங்களில் ஒன்றான இக்கோவில் அண்மையில் ரூ,800 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், ஓய்வெடுப்பதற்கான மையங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் காசிக்கு சென்ற நடிகர் விஷால் இவற்றை பார்வையிட்டார். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடியை டேக் செய்து புகழ்ந்து தள்ளியிருந்தார். அதாவது அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்கு சென்று புனித நீராடினேன். கோவிலை சீரமைப்பு செய்து, அனைவரும் எளிதில் தரிசிக்க கூடிய வகையில் மாற்றியுள்ளீர்கள். நீங்கள் செய்த மாற்றத்திற்கு கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த பிரதமர் மோடி, காசியில் உங்களுக்கு கிடைத்த அற்புதமான அனுபவத்திற்கு மகிழ்ச்சியடைகிறேன். தற்போது அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.