சென்னை நாளையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை இன்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
சென்னை தனது 384-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது, 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22 ஆம் நாள் அன்று கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளடக்கிய கடலோர மீனவக் கிராமங்களை விலைக்கு வாங்கினர். அந்த இடத்தை தங்களுக்கு விற்ற ஐயப்பன், வேங்கடப்பன் என்போரது தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரது நினைவாக கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டிணம் என்று அப்போது அழைக்கப்பட்டது. அது மெட்ராஸாக மாறியது, இன்று தமிந்நாட்டின் தலைநகர் சென்னை என்று அழைக்கப்படுகிறது. மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிரால பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்கிய நிலம் சென்னை பட்டணம் என்று கையெழுத்தானது.
இந்நிலையில் ஆண்டும் மெட்ராஸ் மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று சென்னை நாளையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற இடங்களைக் குறிப்பிடும் கருப்பு- வெள்ளை படங்கள் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சி சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளி மாணவர்களின் ‘அக்கம் பக்கம்’ என்ற இந்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.