இமாச்சல பிரதேசத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதலமைச்சரிடம் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News