சரித்திரம் படைத்தது சந்திரயான் 3… வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்திரயான்-2ல் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு அதுபோன்ற சிக்கல் ஏற்படாத வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 லேண்டர் பத்திரமாக தரையிறங்கவும், இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றி பெறவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News