தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.