அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது தேர்தல் மோசடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் மோசடி செய்ததாக டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது. தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் (இன்று) தாமாக முன்வந்து ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் வழக்குத்தொடர்பாக 24-ஆம் தேதி அமெரிக்க நேரப்படி இரவு 7 மணியளவில் அட்லாண்டா சிறையில் முன்னாள் அதிபர் டிரம்ப் சரணடைந்தார். சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்தியதும் சுமார் 20 நிமித்தில் விடுவிக்கப்பட்டார். பின்னர் உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார். மேலும் அமெரிக்கா வரலாற்றில் இது ஒரு துயரமான நாள் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.