Connect with us

‘ஜெயிலர்’ படத்தை தடை செய்யக் கோரி வழக்கு….அதிரடி நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்

சினிமா

‘ஜெயிலர்’ படத்தை தடை செய்யக் கோரி வழக்கு….அதிரடி நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதாக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எல்லா திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை எப்படி வரைமுறைப்படுத்துவது. மேலும் படம் தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து மனுதாரருக்கு மாற்று கருத்து இருந்தால் தணிக்கை குழுவிற்கு மனு அனுப்பலாம். இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல மனுதாரர் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

More in சினிமா

To Top