ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி, சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பேருந்தில் நடத்துனராக பணியாற்றினார்.
இந்நிலையில் தான் பணியாற்றிய பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இன்று ரஜினி சென்றார். அப்போது தன்னுடன் ஓட்டுநராக பணியாற்றிய ராஜ் பகதூருடன் மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அங்குள்ள பணிமனை ஊழியர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.