மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான மாவட்ட அளவிலான தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். அதன்படி UDISE+ என்ற பெயரில் வெளியான அறிக்கையில் 2020-2021 கல்வியாண்டில் நாடு முழுவதும் 15,09,000 பள்ளிகள் இருந்த நிலையில், 2021-2022-இல் 14,89,000-மாக குறைந்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 20,000 பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.95 சதவீதம் குறைந்துள்ளது என்றும், 44 சதவீத பள்ளிகளில் கணினி வசதிகள், 34 சதவீத பள்ளிகளில் இணைய வசதிகள், 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளன என அதில் தெரிவிக்கப்படுள்ளது.
கொரானாவுக்கு பின்னர் ஆரம்ப பள்ளியிலிருந்து உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள் 25.57 சதவீதம் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது