இந்தியாவின் நீண்ட காலத்திட்டமான சந்திரயான் 3, ஆக.23-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. இந்த வரலாற்று சாதனையை பல வெளிநாடுகளின் முக்கிய தலைவர்களும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம், சூரத்த்தை சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர், இஸ்ரோ விஞ்ஞானியைப் போல ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் இஸ்ரோவின் பண்டைய அறிவியல் பயன்பாட்டுத்துறையின் உதவித் தலைவராக ஆள்மாறாட்டம் செய்து, 2022 பிப்.26-ம் தேதியிட்ட போலிக் கடிதம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இஸ்ரோ ஊழியர் என்று பொய் சொன்னதும் தெரிய வந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தில் இஸ்ரோ விஞ்ஞானி எனக்கூறி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.