தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாதா ? மேல் முறையீடு செய்யப்போகும் டி .கே. சிவக்குமார்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் முறையிட உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம், விநாடிக்கு 24 ஆயிரம் கண அடி தண்ணீர் திறந்து விட தமிழகம் கோரியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது கர்நாடகம்.

இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கண அடி நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட நிலையில் ,இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில், ‘’எங்களது விவசாயிகளை பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். எனவே சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்து மேலாண்மை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வோம். மேலும் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதே காவிரி பிரச்சினைக்கான ஒரே தீர்வு’’ என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News