லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, அந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், விஜயின் அடுத்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெல்கம் டூ ஃபுயுச்சர் என்று கேப்ஷன் வழங்கியுள்ளார். மேலும், 3டி வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் விஜயை ஸ்கேன் செய்யும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது, இந்த படம் ஹாலிவுட் லெவலில் இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.