உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 மாத பெண் குழந்தையைப் தாயிடம் இருந்து பறித்து தரையில் அடித்துக் கொன்ற மனநோயாளி.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் உள்ள ஹர்தோய் ரயில் நிலையத்தில் வைஷாலி என்ற பெண் 8 மாத பெண் குழந்தைவுடன் ரயிலுக்கு காத்திருந்த போது அங்கு வந்த மர்மநபர் திடீரென வைஷாலி கையில் இருந்த குழந்தைப் பறித்து தரையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த குழந்தையைப் பார்த்து வைஷாலி கதறி அழுதுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தார்.
குழந்தையை அடித்துக் கொன்ற அசோக் குமார் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.