மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் திலகமிட மறுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் ,இதில் பங்கேற்க வரும்
தலைவர்களுக்கு நேற்று மாலை கிராண்ட் ஹயாத் ஓட்டலில் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது .அப்போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை வரவேற்ற பெண் ஒருவர் அவருக்கு நெற்றியில் திலகமிட முயன்றார். ஆனால் மம்தா பானர்ஜி நெற்றியில் திலகமிட்டுக் கொள்ள மறுத்து விட்டார்.
இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பெரும் கண்டனத்திற்குரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது . நெற்றியில் திலகமிட மறுத்த மம்தா பானர்ஜிக்கு பாஜக கட்சி தொண்டர்களும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்துள்ள பாஜக தலைவர்கள், மம்தாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.