Connect with us

Raj News Tamil

வசூலில் சாதனை படைத்த லவ் டுடே!

சினிமா

வசூலில் சாதனை படைத்த லவ் டுடே!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர், அடுத்ததாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் மட்டும் 4.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்திருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top