திருப்பதியில் 4 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில்; மேலும் 5-வது ஒரு சிறுத்தை நடமாட்டம்!

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய அண்மையில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது.

பின்னர், சடலமாக அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர்.

இந்த சம்பவங்களில் இதுவரை 4 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிபட்ட நிலையில், இந்நிலையில் மேலும் ஒரு சிறுத்தை, கூண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 5வது ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மலைப்பாதை வழியே திருமலைக்குச் செல்லும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News