வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், உலக தரத்தில் எடுக்கப்பட்டிருந்த விடுதலை திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2-ஆம் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று, குடியரசு தினத்தையொட்டி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவால் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, 75 லட்சம் ரூபாயாக இருந்த தனது சம்பளத்தை, 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே படத்தின் பட்ஜெட் அதிமாகி கொண்டு இருப்பதால், தற்போது இளையராஜாவின் சம்பளமும் வெற்றிமாறனை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. இருப்பினும் விடுதலை 2ம் பாகத்துக்கு எந்த பிரச்சினையும் வராது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.