தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் வடிவேலு. ஆனால், சில அரசியல் காரணங்களால், சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது ஒருசில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டுக்கள பெற்றிருந்தது. இதன்விளைவாக, வடிவேலு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது, மார்கெட் குறைந்திருப்பதால், சம்பளத்தை குறைத்து வைத்திருந்த இவர், தற்போது மீண்டும் பழைய படி, 5 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.