ரஜினியின் ஆசையை நிறைவேற்றிய மோடி…!

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது.

குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது.

இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மன் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.

ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

“ஒருமுறை ரஜினி பிரதமர் மோடியிடம் பேசியபோது, எங்குபார்த்தாலும் பல கட்சிக் கொடிகளை பார்க்க முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேசியக்கொடி இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இதைதான் தற்போது பல காலம் கழித்து செயல்படுத்தி இருக்கிறார்கள்.” என்றார்.

RELATED ARTICLES

Recent News