இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி காலமானார்!

இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர், தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பால் காலமானார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுனில் வளர்மதி குரல் கொடுத்தவர். கடைசியாக சந்திராயன்-3 விண்கலம் ஏவப்படும் போதும் குரலில்தான் கவுண்ட்டவுன் கொடுக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றியவர் வளர்மதி.

இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டுபெற்ற ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதியின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News