அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கியில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. எஸ்டிஆர்எஃப் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளுக்குள் மேலும் 3 முதல் நான்கு பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்த பாரபங்கி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில்,

பாரபங்கியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 12 பேரை மீட்டுள்ளோம். மேலும் பலர் சிக்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து மீட்புப்பணி நடைபெற்று வருகின்றது.

மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். மீட்புப் பணியில் என்டிஆர்எஃப் குழுவும் இணைந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News