குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி…என்னடா இது தக்காளிக்கு வந்த சோதனை

கடந்த மாதம் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதன் பிறகு தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. பழனியை பொறுத்தவரையில் நெய்காரப்பட்டி, தொப்பம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். பொதுவாக ஆவணி மாதத்தில் விளைச்சல் அதிகமாக உள்ளது.

தக்காளியின் வரத்து அதிகமாக உள்ளதால் 14 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி, வெறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலேயே விற்பனையானது. வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.7-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கடந்த மாதம் ரூ.200 வரை விலை உயர்ந்து விற்ற தக்காளி விலை போகாமல் குப்பைகளில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News