சீனப்பெருஞ்சுவரில் ஓட்டையா? வெளிவந்த உண்மை பின்னணி!

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாக உள்ளது. இதனைக் காண ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாச்சார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று.கடந்த 1987-ம் ஆண்டு சீனப் பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்ட நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்படுகிறது. இதனை எவரோ சிலர் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதனை யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலைச் செய்துள்ளனர் என்றும், சுவரில் ஓட்டை போட்டுள்ளனர் என்றும், பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுவரின் குறிப்பிட்ட பகுதியின் அமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News