உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் மசூம் ரசா ரஹி. இவர் மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள மேல்மாடியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி பாஜக தலைவர் ரஹி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை சம்பவத்தை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தையை பாஜக தலைவர் ரஹி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுமியின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர் ரஹி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.