ஒரே ஒரு சிப்ஸை சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஒன் சிப்’ சேலஞ்ச் (one chip challenge) என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது.
இது நீங்கள் நினைப்பது போல சாதாரண சிப்ஸ் அல்ல. மிகக் காரமான மிளகை கொண்டு செய்யப்பட்ட உலகிலேயே அதிக காரமான சிப்ஸ் இதுதான். இந்த சிப்ஸ் பாக்கெட்டே சவப்பெட்டி வடிவத்தில்தான் செய்யப்பட்டிருக்கும். இந்த ஒரே ஒரு சிப்ஸின் விலை ரூ.3612 ஆகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் மசாச்சூஸ்ஸெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் வொலோபா என்ற 14 வயது மாணவன் இரு தினங்களுக்கு முன்பு நண்பர்களின் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு அந்த சிப்ஸை சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்ட ஒரு மணிநேரத்திலேயே வயிற்று வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிப்ஸை தடை செய்ய வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.