சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் மோதல் காரணமாக 50 லட்சம் பேர் புலம் பெயர்ந்து தவிந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:
சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று மோதல் காரணமாக, 50 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருகின்றனா்.
புலம் பெயா்ந்தவா்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா். 7.50 லட்சம் போ் சா்வதேச அகதிகளாகியுள்ளனா். அவா்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.