மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கும் நிதியை தமிழக அரசு அதனை திருப்பி அனுப்புவதோடு பட்டியல் பிரிவு மக்களுக்கு ஒதுக்காமல் வேறு துறைக்கு மாற்றுவதாக புகார் கூறி திருப்பூரில் பாஜக பட்டியல் அணியினர் உண்டியல் குலுக்கி பிச்சை எடுத்து தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட காவல் துயைினர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி அவர்கள் கொண்டு வந்த பேனர்களை பிடுங்கி தர தர வென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றார். இதனால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தாராபுரம் அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.