Connect with us

இன்னொரு ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் சூரி!

சினிமா

இன்னொரு ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் சூரி!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சூரி.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, கொட்டுக்காளி என்ற படத்தில், சூரி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் லிங்குசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறன் தான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் லிங்குசாமி, ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top