வெளிநாட்டு நிபுணர்கள் அறிக்கைகளை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது: சுனில் கவாஸ்கர்!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மற்ற வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி தொடர்பாக பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

இந்தியாவில் கிரிக்கெட் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அதிலும் இந்திய கிரிக்கெட் அணி என்றால், கருத்துக்கள் பன்மடங்கு அதிகரிக்கும். வெளிநாட்டு நிபுணர்கள் தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளை பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. இந்திய அணியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வீரர்களையா தேர்வு செய்கிறோம்? இது எப்படி அவர்களது கவலையாக இருக்கும். இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியை தேர்வு செய்கிறார்களா? அது எங்களது வேலை இல்லை.

கோலி, ரோகித் சர்மாவை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று கூறுவார்கள். ஷாகின் ஷா அப்ரிடி சிறந்தவர், தெண்டுல்கரைவிட இன்சமாம்-உல்-ஹக் சிறந்தவர் என்று கூறினார்கள். அவர்களை பொறுத்தவரை எப்போதும் நம்மை விட அவர்கள் சிறந்தவர்கள் என்பதுதான் அவர்களது வழி. இந்திய அணியில் 3-வது மற்றும் 4-வது வரிசையில் யார் பேட்டிங் செய்ய வேண்டும் என்று வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News