6 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்..வெற்றி பெற்றதா I.N.D.I.A கூட்டணி??

6 மாநிலங்களில் நடைபெற்ற 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சாண்டி உம்மன் (Chandy Ommen) வெற்றி பெற்றுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் துப்குரி (Dhupguri ) சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் கோஷி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்டில் தும்ரி தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

RELATED ARTICLES

Recent News