வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிலான ரஞ்சிதமே பாடல், கடந்த 5-ஆம் தேதி அன்று வெளியானது. இதேபோன்று, துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிலும், நவம்பர் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை அனிருத் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று இன்னொரு அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் செகன்ட் சிங்கிலும், நவம்பர் மாதம் வெளியாக உள்ளதாம்.
இந்த பாடலையும், அனிருத் தான் பாட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவ்வாறு தற்செயலாக அமைந்துள்ள இந்த விஷயம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.