சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் பகுதியில், ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக, அங்கு சென்ற ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, ஆசை ஆசையாக நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள், பார்க்கிங் வசதி இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பயங்கர டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக அங்கிருந்து நிகழ்ச்சி அரங்கிற்குள் சென்றால், குறைவான இருக்கைகள் மட்டுமே அங்கு இருந்துள்ளன.
இதன்காரணமாக அதிருப்தி அடைந்த ரசிகர்கள், தங்களது ஆதங்கத்தை, சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டனர்.
அதில், ஏ.ஆா்.ரகுமான் சார் எங்களுக்காக சிறந்த நிகழ்ச்சியை கொடுத்தார். தற்போது நடந்துள்ள இத்தகைய பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட வளாகத்தில், போதுமான இருக்கையும், இடமும் இருந்தது.
ஆனால், இந்த வளாகத்தின் குறிப்பிட்ட ஒரு நுழைவு வாயிலில் மட்டுமே, ரசிகர்கள் அனைவரும் நுழைய முயன்றனர்.
அதனால், தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. ரசிகர்களின் இந்த கஷ்டத்தை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். எங்களது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அன்பான சென்னை மக்களே, நேற்று நடந்த பிரச்சனையின் காரணமாக, டிக்கெட் விலைக்கு வாங்கியும், இசை நிகழ்ச்சியை காண முடியாத ரசிகர்கள்,
[email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்களது டிக்கெட்டின் நகலை எடுத்து அனுப்புங்கள். இதுகுறித்து எங்கள் அணி விரைவில் பதில் கொடுப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.