40-வது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

40-வது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் பல்கும் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தின் 40-வது மாடியில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்றன. பணியாளர்கள் கட்டுமான பணிகளை நேற்று மாலை 40-வது மாடியில் இருந்து லிட்டில் கீழே இறங்கியுள்ளனர்.

அப்போது லிப்டின் கம்பி அறுந்ததில் 40வது மாடியில் இருந்து லிப்ட் பயங்கர சத்தத்துடன் மிக வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. . இந்த கோர விபத்தில் லிட்டில் இருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனை கண்ட அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்பு பணி ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து, தானே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News