ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பட்டியலின சமுதாயத்தினர் குறித்து தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல் நிலையம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.