விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 2-வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பணிகளின் போது, விஜய்-க்கும், லோகேஷ் கனகராஜ்-க்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இப்படத்தின் ஒருசில காட்சிகளை, இயக்குநரும், லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார் தான் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக தான், தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பயோவில், லியோ படத்தின் பெயரை லோகேஷ் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த தகவலை அவர்கள் நம்பவில்லை என்றே கூறி வருகின்றனர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கவே இவ்வாறு சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.