நடிகர்களின் வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்படுவது வழக்கம். இதுவரை, புரூஸ் லீ, சில்க் ஸ்மிதா, ஷக்கீலா ஆகியோரின் வாழ்க்கைக் கதை, திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில், தற்போது இன்னொரு நடிகையும் இணைந்துள்ளார். அதாவது, குசேலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சோனா ஹைடன்.
இவர், குரு என் ஆளு, ஒன்பதுல குரு, ஜித்தன் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்க, இவர் தற்போது தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து, ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்க உள்ளாராம்.
பிரபல ஓடிடி நிறுவனம் தான், இந்த தொடரை தயாரிக்கவும் உள்ளதாம். இந்த தொடரை முடித்த பிறகு, தனது வாழ்க்கை கதையை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றையும் இயக்கும் முயற்சியில், அந்த நடிகை இருந்து வருகிறாராம்.