கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்ற 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள். என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News