லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தை காண்பதற்கு, தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில், இப்படம் இரண்டு வெர்ஷன்களாக வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, லியோ திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டில் வெளியிடும் அஹிம்சா என்ற நிறுவனம், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், லியோ படம் வெளியாகும் முதல் வாரத்தில், எந்தவொரு காட்சியும் நீக்கப்படாமல், திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு பிறகு, குடும்ப ஆடியன்ஸிற்காக, அதீத வன்முறை காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டு, புதிய வெர்ஷனில், லியோ படம் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்றால், பொதுவாக லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
லோகேஷ் – விஜய் ரசிகர்களையும் திருப்தி படுத்த வேண்டும், குடும்ப ஆடியன்ஸையும் திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில், அதீத வன்முறை காட்சிகள் இருந்ததால், அப்படம் வெளிநாடுகளில் வெளியாகும்போது, சென்சாரில் பிரச்சனை ஏற்பட்டது. அதனை தவிர்ப்பதற்கே, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.