“டேய் கர்மா-னா என்னனு தெரியுமா டா உனக்கு” – அசத்தும் ஜப்பான் பட வீடியோ!

வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஒருசில நடிகர்களில் ஒருவர் கார்த்தி.

இவர் நடிப்பில் உருவான, பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், தீரன் அதிகாரம் என்று பல்வேறு திரைப்படங்கள், இன்றளவும், பல்வேறு ரசிகர்களால், ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதுவும் புதுவித அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் படத்தின் டப்பிங் செய்யும் பணியின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், கார்த்திக் பேசும் வசனம் பலரையும் கவர்ந்துள்ளது.

அதாவது, “டேய் கர்மா-னா என்னனு தெரியுமா டா உனக்கு.. நீ சாகடிச்ச கொசுலாம், டைனோசரா மாறி, உன் முன்னாடி வந்து நிக்கும்.. அது தான் டா கர்மா” என்று டயலாக் பேசியுள்ளார்.

மாஸா ரெடியாகியுள்ள இந்த வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News