பண்டிகை நாளையொட்டி சந்தைகளில் பூக்கள், காய் மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு உள்பட திருச்சி காந்தி சந்தை, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கடலூர் சந்தை, கன்னியாகுமரி தோவாளை ஆகிய சந்தைகளில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை கடந்த வாரத்தை விட 5 மடங்கு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பன்னீர் ரோஜா கிலோ ரூ. 160, மல்லி கிலோ ரூ.800, முல்லை கிலோ ரூ.800, கனகாம்பரம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பழங்களின் விலையும் உயர்ந்து ஆப்பிள் கிலோவுக்கு ரூ.140, வாழைப்பழம் ரூ.100, மாதுளை கிலோ ரூ.160, திராட்சை ரூ.160-க்கு விற்பனையாகிறது.