திமுக, அதிமுக அண்ணன் தம்பி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

அண்மையில் திமுக, அதிமுக அண்ணன் தம்பி என அமைச்சர் கே.என். நேரு பேசியிருந்தார். இதற்கு அதிமுகவின் இபிஎஸ் அணியை சார்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ், அதிமுக மற்றும் திமுக அண்ணன் தம்பிதான் எனக்கூறினார். ஆனால் இருவரும் பயணிக்கும் பாதை வேறு என்றார்.

டிடிவி தினகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறிய அவர், அதிமுக இடத்தை பாஜக பிடிக்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறினார். அதிமுகவின் ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை, மேலும் எங்களை யாராலும் மிரட்ட முடியாது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News