போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இவர் அஜித்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதாக இருந்தார். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த ப்ராஜெக்ட், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து, புதிய படம் ஒன்றை, விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சரியான நேரத்தில் தன்னை பிரதீப் காப்பாற்றியுள்ளதாகவும், தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்றும் கூறியுள்ளார்.