சில்க் ஸ்மிதா கடித்து தின்ற ஆப்பிள்.. ஏலத்தில் விட்ட ரசிகர்.. எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் சில்க் ஸ்மிதா. காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் இவர், இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் என்றால், அது மிகையல்ல.

இந்நிலையில், இவர் கடித்து சாப்பிட்ட ஆப்பிள், ஏலத்தில் விடப்பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம். அதுதொடர்பான தகவல் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது, இவர் உச்ச நடிகையாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொண்டாராம். அப்போது, ஆப்பிள் ஒன்றை பாதி கடித்துவிட்டு, மீதியை தனது இருக்கையில் வைத்துவிட்டாராம்.

அதனை அங்கிருந்த ரசிகர் ஒருவர் எடுத்துச் சென்று, ஏலத்தில் விட்டாராம். அன்றைய காலத்திலேயே, அந்த ஒரு ஆப்பிள் ரூபாய் 200-க்கு விலை போனதாம்.

இதனை வைத்து பார்க்கும்போது, சில்க் ஸ்மிதா, ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வசீகரத்தை பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது.

RELATED ARTICLES

Recent News