“நான் எப்படி இருந்தால்.. உங்களுக்கென்ன” – இணையத்தில் பொங்கி எழுந்த பிரியாமணி!

கண்களால் கைது செய் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி. இந்த படத்திற்கு பிறகு, அது ஒரு கனா காலம், பருத்தி வீரன் உள்ளிட்ட சில தரமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், பேமிலி மேன் சீரிஸ் மூலம், மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது, இவர் நடித்து முடித்துள்ள ஜவான் படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை பிரியாமணி, தனது சமூக வலைதளத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது நிறம் குறித்து விமர்சனம் செய்து, கமெண்ட்ஸ் பதிவிட்டிருந்தனர்.

இந்த கமெண்ட்ஸ்களை பார்த்த பிரியாமணி, அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “ நான் கருப்பாக இருந்தால், உங்களுக்கு என்ன பிரச்சனை. நான் எப்படி இருந்தாலும், அதில் எனக்கு மகிழ்ச்சி தான். தற்போது உங்களது வாயை மூடுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News