ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி டெஸ்ட், டி20 கிரிக்கெட் வடிவ போட்டியில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலின் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.