பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்து சேவை மீண்டும் துவங்கியது

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு காரணமாக நேற்று இரவு எட்டு மணி முதல் நிறுத்தப்பட்டு இருந்த தமிழ்நாடு அரசு பேருந்து சேவைகள் தற்பொழுது மீண்டும் துவங்கியுள்ளது.

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்தது.

முழு அடைப்பு காரணமாக பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நேற்று இரவு எட்டு மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இருந்தபோதிலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஏற்றப்பட்ட அம் மாநில பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. மேலும் பெங்களூர் மாநகரில் பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் கன்னட அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீ ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் சாலை மறியல் ஆகிய நடைபெற்றன. முழு அடைப்பு போராட்டம் ஆனது எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 6:00 மணியுடன் முழு அடைப்பு போராட்டமானது முடிவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்து சேவையானது வழக்கம் போல மீண்டும் துவங்கியுள்ளது. அதேபோல பிற வாகனங்கள் சேவைகளும் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன.

RELATED ARTICLES

Recent News