ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 2018.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படம், இந்தியா சார்பில், ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல், பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.